பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பிஹெச்.டி. மாணவர் கருப்பசாமி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை ஏப்.27ஆம் தேதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததை அடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனை கைது செய்தனர்.

உதவி பேராசிரியர் முருகன்
உதவி பேராசிரியர் முருகன்

இதனையடுத்து உதவி பேராசிரியர் முருகனை, காவிலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார், சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், முருகனிடம் ஐந்து நாட்கள், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பிஹெச்.டி மாணவர் கருப்பசாமி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (ஏப்.25) சரண்டைந்தார். அவரை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, பேராசிரியை நிர்மலாதேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர். புகாரளித்த மாணவிகள் 18 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் என்பதால், சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும், மாணவிகள் சார்பில் வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: பத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்