பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரியான சந்தானமும் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததை அடுத்து, அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவி, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிர்மலாதேவியை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவினை விசாரித்த சாத்தூர் நீதித்துறை இரண்டாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி கலா, வரும் 24ஆம் தேதி வரை விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

mku

இதனைத்தொடர்ந்து அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நியமித்த விசாரணை அதிகாரியான சந்தானமும் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தவுள்ளார். இதனிடையே மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

இதையும் படியுங்கள்: #NoIPLinChennai: சோறா, ஸ்கோரா? தெறிக்கவிட்ட தமிழ் மக்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்