நிரவ் மோடி வழக்கின் விசாரணை அதிகாரியை பணிநீக்கம் செய்துவிட்டு ஒன்றிரண்டு மணி நேரங்களில் திரும்பவும் பணிக்கு சேர்த்த மோடி அரசு ; காரணம் இதுதான்

0
378

நிரவ் மோடியின் வழக்கை விசாரணை செய்யும் அமலாக்க இயக்குநரக அதிகாரியை  நரேந்திர மோடி அரசு பணியிலிருந்து நீக்கம் செய்துவிட்டு இரண்டு மூன்று மணி நேரங்களில் அவரை மீண்டும் அதே பணியில் சேர்த்தது.  

மும்பை அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர்,  நிரவ் மோடியின் வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறையின் துணை இயக்குனர் சத்யபிரதா குமார் அவர்களை சத்தமில்லாமல் பணிமாற்றம் செய்தார்.   
பணிமாற்றம் செய்த கடிதம் – Courtesy – The Wire 

உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் நடக்கும் நிலக்கரி ஊழல் வழக்கிலும்  சத்யபிரதா குமார்தான் விசாரணை அதிகாரி.   

தற்போது லண்டனில் இருக்கும் சத்யபிரதா குமார் அமலாக்கத்துறையில் தான் இருப்பதாக தி வயர் இதழிடம் உறுதி செய்தார், ஆனால் பணிமாற்றம் செய்தது பற்றியோ , மீண்டும் பணிக்கு சேர்த்தது பற்றியோ கருத்துக் கூற மறுத்துவிட்டார்.    

சத்யபிரதா குமாரின் பணிமாற்றம் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தெரியும் என்று மூத்த அதிகாரிகள் கூறுகிறார்கள். லண்டனில் நிரவ் மோடியின் கைதும் , இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்ற கோரியிருக்கும் நிலையில்  திடீரென்று சத்தமில்லாமல் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரியை அரசு ஏன்  பணிமாற்றம் செய்கிறது என்பதுதான் நம்முடைய ஆர்வத்தை அதிகரிக்கிறது .   

சத்ய பிரதா குமாரின் பணிமாற்றத்தை ரத்து செய்த கடிதம்  

சத்ய பிரதா குமாரின் பணிமாற்றம் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கும் என்று அமலாக்கத் துறையின் இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா கூறியுள்ளார். 

விசாரணை அதிகாரி சத்ய பிரதா குமாரின் பணிமாற்றத்துக்கு கூறப்பட்ட காரணம் பணிக்காலம் நிறைவுற்றது என்று . பணிமாற்றம் உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் என்று  நிதி அமைச்சகத்துக்கு தெரியும் என்று அமலாக்கத்துறையின் மூத்த அதிகாரிகள் கூறுகிறார்கள். 

ஏன் சத்ய பிரதா குமாரை இவ்வளவு அவசரமாக பணிமாற்றம் செய்ய வேண்டும், என்ன காரணம் , யார் இதை பின்னாலிருந்து இயக்கினார்கள் ? நிரவ் மோடி விசாரணையை பிரதமர் அலுவலகம் கவனித்து வருகிறார்கள் என்றும் இந்த வழக்கில் தலையிட்ட சில தீவிரமான அரசியல் முயற்சிகளை சத்ய பிரதா குமார்  எதிர்த்ததாகவும் நம்பதகுந்த தகவல்கள் கூறுகின்றன. 

அமலாக்கத் துறைக்குள் நடந்த குழப்பமான மோதல்கள் சிபிஐக்குள் நடந்த மோதல்களை நினைவு படுத்துகிறது. சிபிஐக்குள் நடந்த மோதல்களைத் தொடர்ந்து  மோடி அரசு நடுராத்திரியில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பணிநீக்கம் செய்தது . அந்த மோதல்கள் மட்டும் காரணம் அல்ல அலோக் வர்மா ரஃபேல் வழக்கை விசாரிக்க துவங்கலாம் என்றிருந்தபோது பணிநீக்கம்  நடந்தது .  

தொழிலதிபர் நிரவ் மோடி அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று முறைகேடு செய்தது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

நீரவ் மோடியைக் கைது செய்வது தொடர்பான இங்கிலாந்தின் தீவிரமான மோசடிகள் தொடர்பான அலுவலகத்தின் (Serious Fraud Office – SFO) கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு அமைதி காத்தது. நகைத் தொழில் அதிபரான நீரவ் மோடி இந்தியாவிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தபோது, அவர் கிரிமினல் குற்றம் செய்ததால் கைது செய்ய ஒத்துழைப்பதாக பிரிட்டன் அரசு கூறியது. பிரிட்டன் அதிகாரி, கடந்த அண்டு நீரவ் மோடி லண்டனில் இருந்ததை உறுதி செய்தது. அவரைக் கைது செய்வதற்கான ஆவணங்களைத் தயார் செய்ய அதிகாரிகளை இந்தியா அனுப்புவதாகவும் தெரிவித்தது. இந்திய அரசு இது பற்றி  மவுனம் காத்தது.

 பின்பு தி டெலிகிராஃப் இதழின் செய்தியாளர் நிரவ் மோடியை பேட்டிக் கண்டதைத் தொடர்ந்து மோடி அரசு நிரவ் மோடி பற்றிய ஆவணங்களை அனுப்பி வைத்தது.  

அவர்கள் தங்களை காவலாளி என்று கூறிக் கொள்கிறார்கள் ஆனால் மோசடி செய்தவர்களை காப்பாற்ற துணை நிற்கிறார்கள் என்று கோபமாக அமலாக்கத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தி வயர் இதழிடம் கூறியுள்ளார். 

நிரவ் மோடியை விசாரிக்கும் அதிகாரி பணிமாற்றம் குறித்து சில ஊடகங்கள் பேச ஆரம்பித்தவுடன் அமலாக்கத்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் அந்தச் செய்தி தவறானது என்று பதிவிட்டது 

https://thewire.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here