நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர்கள் திடீரென புகுந்து கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய தூதர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தனது டிவிட்டர் பதிவில், “சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி, இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் மாயமானதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.

மனிதர்களுக்கு எதிராக மாபெரும் குற்றம் அரங்கேறியுள்ளது. நாங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பிரார்த்திக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒசைர் காதர், ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஜ் அஷான், கரீம்நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான், உட்பட 8 இந்தியர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அகமது இக்பால் ஜகாங்கீர் என்பவர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதில் ஒசைர் காதர்(25) நியூசிலாந்தின் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களின் சடலங்களை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here