நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டித் தொடரில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆடும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கு விராட் கோலி கேப்டனாகத் நியமிக்கப்பட்டுள்ளார். மீண்டும் மகேந்திரசிங் தோனி சேர்க்கப்பட்டிருக்கிறார்.

துணை கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகார் தவான், அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அகமது, முகமது சமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, முகமது சமிக்கு நீக்கப்பட்டு, ரிஷப் பந்த், க்ருனல் பாண்ட்யா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here