நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா: தேர்தல் தள்ளிவைப்பு

New Zealand Prime Minister Jacinda Ardern says she is delaying the country's parliamentary election by four weeks to October 17 after the reemergence of Covid-19 in the country last week.

0
242

நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கி இருப்பதால், அந்நாட்டின் தேர்தலை தள்ளி வைத்துள்ளார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.

கொரோனா தொற்று வேகமாக உலகம் முழுவதும் பரவிய நேரத்தில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திறமையாக கையாண்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

அங்கு மொத்தமே 1500-க்கும் குறைவான கொரோனா தொற்றுதான் பதிவாகியிருந்தது. இதுவரை 14 மரணங்களே நிகழ்ந்துள்ளன. கொரோனா தொற்று முழுமையாக இல்லாததால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜெசிந்தா ஆர்டென் ஊரடங்கை முழுமையாக தளர்த்தினார். அதோடு, சுற்றுலா தலங்களையும் திறந்திருந்தார். இந்நிலையில் , 102 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று வந்ததால் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாஆர்டென் நாட்டின் பொதுத் தேர்தல் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்றார்.

மேலும் ‘மீண்டும் தேர்தலை தள்ளி வைக்க மாட்டேன். அக்டோபரில் நிச்சயம் நடக்கும்’ என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக அடுத்த மாதம் 19 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here