நிபந்தனைகளுடன் ஆட்டோக்கள் இயக்க தமிழக அரசு அனுமதி

0
226

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக பஸ், ஆட்டோ, உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்ட போதும், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் கொரோனா தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

தற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர, தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்சா ஆகிய வாகனங்கள் நாளை(சனிக்கிழமை) முதல் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்டோ ஓட்டுநருடன், பயணி ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தினமும் 3 முறை கிரிமி நாசினி தெளித்து தூய்மைபடுத்த வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here