நிதி அமைச்சகம் மக்களவையில் சமர்பித்த தகவலில் இந்தியாவில் நிதிமோசடிகளில் ஈடுபட்டு இந்தியாவிலிருந்து 28 பேர் தப்பியோடி வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள் என்று கூறுகிறது.

இந்த 28 பேர்களில் 6 பேர் பெண்கள். இவர்களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நிதி மோசடியில் ஈடுபட்டவர்களில் விஜய் மல்லையா ரூ7500 கோடியும், நிரவ் மோடி ரூ6498 கோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ரூ7080 கோடியும், ஏமாற்றியிருக்கின்றனர். இவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Screen Shot 2018-08-04 at 4.11.05 PM

Screen Shot 2018-08-04 at 4.11.29 PM

Screen Shot 2018-08-04 at 4.11.46 PM

Screen Shot 2018-08-04 at 4.12.17 PM

Screen Shot 2018-08-04 at 4.12.26 PM

Screen Shot 2018-08-04 at 4.12.36 PM

ஸ்டெர்லிங் பயோடெக் – சேத்தன் சண்டேசரா, நிதின் சண்டேசரா, தீப்திபென் சண்டேசரா

வின்சம் டயமண்ட்ஸ் – ஜேதின் மேத்தா

ஶ்ரீ கணேஷ் ஜுவல்லரி – நிலேஷ் பரேக், உமேஷ் பரேக், கம்லேஷ் பரேக்

துவாரகா தாஸ் சேத் இண்டெர்நேஷ்னல் – சப்யா சேத்

சூர்யா பார்மா – ராஜிவ் கோயல் , அல்கா கோயல் போன்றோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

இது தொடர்பாக சுமார் 23 வழக்குகள் சிபிஐ வசம் உள்ளது , அமலாக்கத்துறை வசம் 13 வழக்குகள் உள்ளது. விஜய் மல்லையா, சோக்ஸி, நிரவ் மோடி, ஜதின் மேத்தா ஆஷிஷ் ஜோபன்புத்ரா, சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா, நிதின் ஜெயந்திலால், தீப்திபென் சேத்தன் குமார் சந்தேசரா ஆகியோர் 2 பட்டியல்களிலும் உள்ளனர்.

மார்ச் 2018 வரை 48 நாடுகளுடன் நாடுகடத்தல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது இதில் அமெரிக்கா, ஐக்கிய அரபு, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஹாங்காங் ஆகிய நாடுகளும் அடங்கும். இது தவிரவும் குரேஷியா, இத்தாலி, ஸ்வீடன் ஆகிய நாடுகளுடன் நாடுகடத்தல் உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளன என்று வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் தெரிவித்தார்.

Courtesy : Bloomberg Quint

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here