நிஜாமாபாத்தைத் தொடர்ந்து வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட விவசாயிகள் முடிவு

0
208
Modi

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டியிட தெலங்கானா விவசாயிகள் 50 பேர்  முடிவு செய்துள்ளனர்.

பிற்படுத்தபட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் உட்பட 50 விவசாயிகள் ‘வாங்க வாரணாசிக்கு போகலாம்’ என்று ஒன்றிணைந்து வாரணாசியில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர் என்று அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஏப்ரல் 28 ஆம் தேதி மனு தாக்கல் செய்யவுள்ளனர். பிரதமர் மோடி ஏப்ரல் 26 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார். 

தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில்  மொத்தம் போட்டியிட்ட 185 வேட்பாளர்களில்  170 பேர் அப்பகுதி விவசாயிகள் . மஞ்சள் உற்பத்தி செய்யும் இவர்கள், மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரி வருகிறனர். இவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இங்கு போட்டியிட்டனர். 

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “நாங்கள் யாருக்கும் போட்டியாக தேர்தல் களத்தில் நிற்கவில்லை. எங்களுடைய பிரச்சினையை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதிய அரசாவது எங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வை காணவேண்டும்” என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here