தமிழில் டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா, கலகலப்பு-2, சார்லிசாப்ளின்-2, கீ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

 இந்நிலையில் இவரையும் கொரோனா நோய் தாக்கி உள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில்,  “எனக்கு கடந்த வாரம் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. காய்ச்சல், சுவை இல்லாத தன்மை, நுகரும் திறன் குறைவு போன்ற பிரச்சினைகள் இருந்தன. 

நோயின் தாக்கம் லேசாக இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரைபடி வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறேன். தற்போது உடல்நிலை தேறி உள்ளது. நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவேன். சென்னை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நன்றி.

வீட்டில் இருப்பவர்கள் நலன் கருதி வெளியே செல்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்லுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here