நிக்கி கல்ராணி  கடந்த 2014ஆம் ஆண்டு மலையாள படம் மூலம் அறிமுகமானார்.  தொடர்ந்து மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து டார்லிங் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. தற்போது  சசிகுமாருக்கு ஜோடியாக ‘ராஜவம்சம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த  மலையாள படம் ஒன்று வெளிவரத் தயாராகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நிக்கி கல்ராணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நிக்கி, ‘நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். எனக்கும் காதல் அனுபவம் உள்ளது.
அவர் யார் என்று நான் இப்போ சொல்ல மாட்டேன். 3 வருடங்களுக்குப் பிறகு அவரை தான் திருமணம் செய்து கொள்வேன். அப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
சென்னையை சேர்ந்த அந்த நபர் யாராக இருக்கும் என்று கேள்வி ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர் திரைத்துறையைச் சேர்ந்தவராக இருக்குமா அல்லது மற்ற துறையில் வேலை பார்ப்பவராக இருக்குமா என்று குழப்பி வருகின்றனர்.

எல்லாம்சரிதான்,  மூன்று வருடங்கள் அவர்காத்திருக்கலாம்  ஆனால் நாம்  ஏன் காத்திருக்கணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here