நாளை (மே25) முதல் ரேஷன் கடைகள் இயங்க அனுமதி

0
356

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 31ஆம் தேதி வரும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல் செய்துள்ளது. அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தளர்வுகளற்ற ஊரடங்கில் நியாய விலை கடைகள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் நியாய விலையில் கிடைக்கும் பொருட்களை மக்கள் பெற்று பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காய்கறி மற்றும் பழங்களை தமிழக அரசே நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் மாநிலம் முழுவதும் மக்களுக்காக விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதன் படி செவ்வாய்கிழமை முதல் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என்றும், 2 ஆயிரம் ரூபாய் முதல் தவணை கொரோனா நிவாரண நிதியைப் பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here