தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதன்கிழமை(நவம்பா் 11) முதல் மதுரையிலிருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையைக்காக சொந்த ஊா்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக, சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசுப்போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை, கோவை, திருப்பூா், சேலம், திருச்சி ஆகிய நகரங்களுக்கு மதுரை, தேனி, கம்பம், சிவகாசி, ராஜபாளையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இது குறித்துப் பேசிய அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள்,150 சிறப்புப் பேருந்துகள் நாளை(புதன்கிழமை) முதல் இயக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிக்காக மதுரை – சென்னை இடையே 500 நடைகள், பிற நகரங்களுக்கு 250 நடைகள் இயக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்.