காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் ஐபிஎல் போட்டியின் பொழுது நடந்த போராட்டத்தில் போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஐ.பி.எல்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரும் போராட்டம் நடபெற்றது.

அப்பொழுது பணியில் இருந்த காவலர் ஒருவரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கடுமையாகத் தாக்கிய பொழுது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

திருவல்லிக்கேணி போலீசார் தனிப்படை அமைத்து போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மதன்குமாரை தற்பொழுது கைது செய்துள்ளனர்.

எண்ணூரைச் சேர்ந்த மதன்குமார் மீது நான்கு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். அதில் ஒரு வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற்று மீதமுள்ள 3 வழக்குகளில் அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்