நான் வேறு அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி என்று கூறினால், பொய் சொல்கிறேன் என்று அர்த்தம்: தோனி

0
565

ரைசிங் புனே சூப்பர்கையின்ஸ் ஐபில் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மஹேந்திர சிங் தோனி நேற்று புனே அணியின் ஜெர்சியை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை அணியை மிஸ் பண்ணிறிங்களா என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்க, அதற்கு தோனி வார்தைகள் தடுமாற பதிலளித்துள்ளார்.

12728813_1019629988086203_6083935151105005520_n

” நான் சென்னை கடந்து வந்து விட்டேன் என்று கூறினால் நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தம். கடந்த எட்டு வருடத்தில் எனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் உள்ள பிணைப்பை வார்தைகளால் கூற முடியாது”. ”சென்னை அணியில் இருந்த வீரர்கள், எங்களது ஒய்வு அறையில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகள் என அத்தனையும் எனது ஞாபகத்தில் உள்ளது”. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நான் பயணித்த எட்டு வருடம், எனது வாழ்கையில் பசுமை நினைவுகளாய் என்று இருக்கும்”.என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்