File


நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்ள சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் மறைவான அந்தரங்க விஷயங்களில் டார்ச் லைட் அடிப்பதையே பிரதான தொழிலாக்கியிருக்கும் மீடியாக்களும் உள்ளன. அதற்குத்தான் அதிக வரவேற்பும், லைக்குகளும் கிடைக்கின்றன.

நடிகை ஆண்ட்ரியா அடிப்படையில் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். சினிமா வாரிசாகவோ, தனது அழகை மூலதனமாக வைத்தோ சினிமாவுக்குள் வந்தவர் அல்ல. நடிப்பின் மீதான ஆர்வத்தில் நடிகையானவர். சினிமா சம்பிரதாயங்களில் பலவும் அவரை இன்னும் அண்டவில்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மீடியா தனது மூக்கை நுழைப்பதை கறாராக மறுப்பவர்.

இணையத்தில் ஆண்ட்ரியா குடிக்கும், புகைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால், சினிமா விழாவுக்கு வந்தாலும், படத்தைப் பற்றி கேட்பதைவிட்டு, ஆண்ட்ரியாவின் பிடித்த பிராண்ட் எது என்பதை அறிவதிலேயே மீடியாக்கள் ஆர்வம் காட்டுகின்றன. கன்னடத்தில் மாளிகை என்ற படத்தில் ஆண்ட்ரியா இரு வேடங்களில் நடித்துள்ளார். அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது, படம் குறித்து கேட்காமல் குடி, புகை குறித்து கேட்க, கடுப்பாகிவிட்டார். பேட்டின்னா என்னோட தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிதான் கேட்பீங்களா? நோ பேட்டி என்றிருக்கிறார்.

இந்த கன்னடப் படம் விரைவில் தமிழில் டப்பாகி வெளிவர உள்ளது. அப்போது நம்மூர் மீடியா என்ன கேட்பார்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here