நான் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டேன்; இருளில் போராடிக் கொண்டிருக்கிறேன் -பிரதமர் மோடியின் விமானத்தை சோதனை செய்த அதிகாரி

0
474

கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை சோதனை செய்தார் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோசின். அவரின் இந்த செயலை கண்டித்து தேர்தல் ஆணையம், சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது பணியைத்தான் செய்தேன். சட்டத்துக்கு உட்பட்டு நான் தொடர்ந்து எனது பணியைச் செய்வேன்’ என்று கூறியுள்ளார். 

ஐ.ஏ.எஸ் அதிகாரி மோசின் ஒடிசாவில் தேர்தல் பார்வையாளராக உள்ளார். இதையடுத்து, கடந்த 16 ஆம் தேதி, ஒடிசாவின் சம்பல்பூரில் வந்திறங்கிய பிரதமர் மோடியின் விமானத்தை சோதனை செய்துள்ளார் மோசின். இது தேர்தல் விதிமீறல் என்று குற்றம் சாட்டியது இந்திய தேர்தல் ஆணையம். இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டார் மோசின். அங்கு அவரது சஸ்பெண்ட் ஆர்டருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. 

தற்போது இந்தப் பிரச்னை பூதாகரம் எடுத்துள்ள நிலையில், அவரிடம் NDTV பேசிய போது  ‘பிரதமர் மோடியின் விமானத்தை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீடியோ எடுக்கச் சொன்னேன். இது என் கடமை. என் பணி. இதைச் செய்ததற்கு என் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தில் எனக்கு நியாயம் கிடைக்கப் போராடுவேன்.

நான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்றேன். எனக்காக நான் இருளில் போராடுகிறேன். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நான் வீடியோ எடுப்பதற்கு அனுமதிக் கொடுத்தேன் , வீடியோ எடுத்தவர் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீது மட்டும் நடவடிக்கை எடுத்ததுள்ளது அதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை. நான் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே அனுமதிக் கொடுத்தேன் . 

எனது பணியை செய்ததற்காக நான தண்டிக்கப்பட்டுள்ளேன். என்மீது பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் குறித்த ஆவணத்தைக் கூட என்னிடம் தரவில்லை. என்னிடம் ஆவணம் இருந்தால் நான் அதைப் பொறுத்து வாதிடுவேன். எனக்காக நான் இருளில் போராடுகிறேன்.

முகமது மோசின் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், ‘பிரதமரின் சிறப்பு காவல் படை (எஸ்.பி.ஜி) வழிகாட்டுதல்படி மோசின் நடந்து கொள்ளவில்லை’ என்று குற்றம் சுமத்துகிறது. 

இப்படி தேர்தல் பார்வையாளராக இருக்கும் ஓர் அதிகாரி, சோதனை செய்வது என்பது விதிகளுக்குப் புறம்னாது அல்ல என்று கூறப்படுகிறது. இதே கருத்தை வலியுறுத்தித்தான் ஐ.ஏ.எஸ் மோசினுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. 

‘நடவடிக்கை எடுக்கும் முன்னர், நான் எஸ்.பி.ஜி அதிகாரிகளிடம் கேட்டேன். பிறகுதான் சோதனை செய்தேன்’ என்று கூறுகிறார் அதிகாரி மோசின். 

கடந்த வியாழக்கிழமை ஐ.ஏ.எஸ் மோசினின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், ‘எஸ்.பி.ஜி பாதுகாப்புப் படையினருக்கு உரிமையளிக்க அதிகாரம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்றோர் சென்ற தனி வாகனத்தில் கூடத்தான் சில நாட்களுக்கு முன்னர் சோதனை செய்யப்பட்டது’ என்று விளக்கம் அளித்தது. 

‘நான் 22 ஆண்டுகால அனுபவம் உள்ள அதிகாரி. நான் எந்தக் கட்சியைச் சார்ந்தவனும் அல்ல. சட்டப்படி எதையும் எதிர்கொள்வேன்’ என்று முடிவாகக் கூறினார் ஐ.ஏ.எஸ் மோசின். 

ndtv.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here