நான் சினிமாவில் இருந்து விலக சரியான நேரம் : சமந்தா

Latest reports says, Samantha Akkineni and Nayanthara will be seen together on the big screen in the upcoming film starring Vijay Sethupathi in the lead role. However, there is no official word regarding the same.

0
226

தமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். 2010–ல் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ, அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், இரும்புத்திரை, யூ டர்ன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன.

2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.  

இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை, ஏ மாய சேசாயே தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்  2017–ல் சமந்தா.  திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். 

கடைசியாக 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவில் திரிஷா நடித்த வேடத்தில் நடித்துள்ளார். அப்படம் கடந்த 7 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியானபோது திரிஷா அளவுக்கு சமந்தாவின் நடிப்பு எடுபடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படம் வெளியான பிறகு சமந்தாவும் திரிஷாவுக்கு இணையாக சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படு உற்சாகத்தில் இருக்கிறார் சமந்தா.

இந்நிலையில், திரையுலகில் இருந்து விடைபெறுவதற்கு முன்பு அழுத்தமான நடிப்பை பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த சமந்தா, இந்த படத்தில் கிடைத்துள்ள நல்ல விமர்சனத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்ல திட்டமிட்டிருக்கிறாராம். இதையடுத்து அவர் அளித்த ஒரு பேட்டியில், இதுதான் நான் சினிமாவில் இருந்து விலக சரியான நேரம் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.

மேலும், இப்போதைக்கு ஜானு படத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்வதாக சமந்தா தெரிவித்திருந்தபோதும்,அவர் இதை இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here