தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கொடி படத்தின் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மணியறையில் அசோகன்’படத்தில் இடம்பெற்ற உன்னிமாயா என்கிற ஒரு பாடலை அந்தப் படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரன் தானே பாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி குறிப்பிட்டுள்ள அனுபமா, “நான் ஒன்றும் பிரபலமான பின்னணி பாடகி கிடையாது. ஏதோ என்னால் முடிந்த அளவு உன்னிமாயா பாடலை முணுமுணுத்துள்ளேன். கேட்டுவிட்டு கிண்டல் செய்யாதீர்கள். இசையமைப்பாளரே என்டார்ச்சரை பொறுத்துக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தப் படத்திற்காக துல்கர் சல்மானும் படத்தின் ஹீரோ ஜேக்கப் கிரிகோரியும் இணைந்து உன்னிமாயா இந்தப்பாடலைப் பாடியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர்துல்கர் சல்மான தன்னுடன் பல படங்களில் காமெடி நடிகராக இணைந்து நடித்த ஜேக்கப் கிரிகோரி என்பவரை கதாநாயகனாக நடிக்க வைத்து வைத்து படத்தை தயாரித்து முடித்துவிட்டார். இந்த படத்தை சம்சு சைபா என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், நிகிலா விமல், மற்றும் அனுசித்தாரா என மூன்று பேர் நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here