“நான் ஆதிக்கச்சாதி; ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்”

20
856

சாதியைக் கடந்து திருமணம் செய்வதால் தன் மகளையே கொலை செய்யும் அளவுக்கு ஆணவக் கொலைகள் தன் கோர முகத்தைக் காட்டி வருகின்றன. இங்கு சில பெண்கள் ஆதிக்கச் சாதியாக இருந்தாலும் இந்த சமூக அவலத்துக்கு எதிராக தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
nirmala
நிர்மலா கொற்றவையின் விளக்கம்: ”நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலைகளை எதிர்ப்பவள்” என்கிற இந்தப் பிரகடன பரப்புரையின் முழுமையான தன்மை தெரியாமல் இதில் இணைவதற்கு ஒப்புக்கொண்டு விட்டேன்; நான் சாதி மறுப்பாளர்; ஆகவே சாதி ஆணவக்கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
kutty revathi
archana pn
thamizhachi thanga pandian
vinothini
jothimani sennimalai
gayathri srikanth
panimalar panneerselvam
archana seker
Aarthi Sundararaj
sonia arunkumar
குறிப்பு: ஆணவக் கொலைகளுக்கு எதிரான இந்தப் பிரச்சாரத்துக்கு நிர்மலா கொற்றவை, சுமதி தங்கபாண்டியன், காயத்ரி ஸ்ரீகாந்த், ஜோதிமணி ஆகியோர் ஆதரவு வழங்கியதற்கு நன்றி; ஆணவக் கொலைகளுக்கு எதிராகப் பேச வேண்டிய தலித்திய போராளிகளில் சிலர், இலக்கு தவறி இந்தப் பிரச்சாரத்துக்கு முன்வந்த பெண்களை சமூக வலைத்தளங்களில் வன்மத்துடன் தாக்கியதால் இவர்கள் இனிமேல் இந்தப் பரப்புரைக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். கருத்துரிமையைப் பறிக்கும் இந்த வன்செயலை இப்போது டாட் காம் கண்டிக்கிறது. இது தொடர்பான தலையங்கம்.

20 கருத்துகள்

 1. இந்த பதிவில் முக்கியமாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், ஆணவக் கொலைகள் என சரியான சொல் பயன்பாட்டை பயன்படுத்தியிருப்பது சரி, ஆனால் நான் உயர் சாதி / ஆதிக்க சாதி எனக் குறிப்பிடுவது பிழை.

  நான் உயர் / ஆதிக்க சாதிய குடும்பத்தில் பிறந்தவர் / பிறந்தவள்.

  I happened to born in a upper caste / feudal caste family / community.

  இந்த வேறுபாடு இல்லை எனில், இது ஒரு supremacist பதிவு தான். சுயசாதி பற்று இருக்கிறதா என்கிற வேறுபாடு தான் அடிப்படை.

 2. நான் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் குறிப்பிடவில்லையே! இட ஓதிக்கீட்டை ஆதரிக்கும் ஜோதிமணி போன்றோர்கள் சுய விளம்பரத்திற்காக, நான் உயர் சாதி, ஆதிக்க சாதி என்றுதானே குறிப்பிட்டுள்ளீர்கள். கடவுள் உண்டு. சாதி உண்டு. மதம் உண்டு. கலாசாரம் உண்டு. பண்பாடு உண்டு. கடவுள் இல்லை என்று நம்பினால், எந்த தவறையும் செய்ய தயங்கமாட்டான். சாதி இல்லை என்று நம்பினால், உறவுகள் இல்லை. மதம் இல்லை என்று நம்பினால், நெறிமுறைகள் இல்லை. கலாசாரம் இல்லை என்று நம்பினால், மேற்கண்ட யாவும் இல்லை. பண்பாடு இல்லை என்று நம்பினால், அடையாளமே இல்லை. அதனால், அவரவர்களும் சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரத்தை வளர்த்திடுங்கள். சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போனபிறகு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரமும் போய்விட்டது.

 3. இது என்ன உயர் ஜாதி, ஆதிக்கசாதி…தேவையற்றவாதம்.. இந்தப்பெண்களின் பெயருக்குப்பின்னால் சோனியா ஐயர், அர்ச்சனா கவுண்டர், கொற்றவை நாயக்கர்,மீனா தேவர், ரேவதி முதலியார்,சுமதி செட்டியார் என்றா இருக்கிறது…உங்கள் பெயருக்குப்பின்னால் ஒரு ஆணின் பெயர்தானே இருக்கிறது.. ஆணாதிக்கத்தின் அடிமையான நான் இந்த ஆணவக்கொலையை கண்டிக்கிறேன் என்ரு வேணுமானல் போடுங்கள்..
  ஆ.ஈசுவரன், திருப்பூர்

 4. சாதி கிடக்கட்டும் மன்னாங் கட்டி மனிதம் என்னவாயிற்று? வாழ வேண்டிய இளம் பிஞ்சுகளை வவெட்டி சாய்த்த அரக்கா்களுக்கு மன்னிப்பே கிடையாது

 5. நான் உயர்சாதி என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை… இப்போது.காம் நான் கொடுத்த அனுமதியை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்ன்னு கொற்றவை சொல்லிருக்காங்க… அவர்கள் சொல்லாத விஷயத்தை சொன்னதாக பிரசுரிப்பது தர்மமாகாது…

 6. சாதி வெறியினால் ஊட்டப்பட்டது நமது வாழ்வியல். பேசுகிற நாமனைவருக்கும் , சாதி மறுப்பாளர்கள் உட்பட சாதி ஒரு சொறி சிரங்கு. பார்க்க அருவருப்பாக இருக்கும். ஆனால் சொரிய, சொரிய சுகமாகவும் இருக்கும். பொருளாதாரப் பின்னனி வலுத்தவன், எதையும், சமாதானம் செய்து கொள்கிறான். பாட்டாளிகளும், அடித்தட்டு ஏழைகளும் இதில் உழல்கிறார்கள். அடுக்குமுறை சாதியத்தில் நாம் ஒவ்வொருவரும் முதலாளித்தவம் எண்ணம் கொண்டுள்ளோம். தனக்கு கீழ்ப்பட்ட மனிதன் தன்முன்னர் கைகட்டி தாழ்ந்து பணிந்து நிற்கும்போது எனக்கும் அந்த சொரி சிரங்கு சொரியச் சொல்லுகிறது . நானும் சொரிந்து கொள்கிறேன். இந்நோய் தீர்க்க வந்த மகான் புத்தனை, அன்னிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்துவிட்டோம். சித்தர்கள் தமிழில் தோன்றினார்கள். விபூதிப் பட்டை அடித்து ஆண்டிக்கோலம் பூன வைத்துவிட்டோம். வள்ளலார் புறப்பட்டார். அன்னதானத்திற்கு மட்டும் என அடையாளமிட்டு மரியாதையுடன் புறக்கணித்து வரை கோர்வஸ் கொலை செய்துவிட்டோம். தந்தை பெரியார் பல நூறு ஆண்டுகளுக்குப்பின் வாராது போல் வந்த மாமணியாய், பண்டிதர்கள் மட்டுமே அறிந்திருந்த பகுத்தறிவு, மூட நம்பிக்கை, சாதிமறுப்பு, சுயமரியாதை, தொன்மை நாகரிக அடையாளம், அனைத்தையும் பட்டிக்காட்டு பாமரனையும் பேச,சிந்திக்க வைத்தார். இதற்கு ஊற்றுக்கண் வேதம், கீதை, இதிகாசம், வேதாந்தம் என்றார். இதை எதிர்க்க முடியாதபடி பலமான அடித் தளமான, சுயொழுக்கம், தனிமனித ஒழுக்கம், பொது வாழ்வில் தூய்மை அணா,பைசா ,சல்லிக்காசு வரை சுத்தம்,வாய்மை, நாணயமிகு சொல், நேர்மை ஆகிய அடித்தளத்தில் பீடமிட்டு அமர்ந்திருந்தார். அவரை விமர்சிக்க சனாதனம் அஞ்சியது. ஆனால் கேடு கெட்ட அரசியலால் , தனிமனித ஒழுக்கம் கெட்டது. த த்துவம் சொன்னவரை வீழ்த்த நினைத்து சந்தர்ப்பம் கிடைக்காதா ? என காத்திருந்தவர்கள் இன்று முச்சந்தியில் ஒலிபெருக்கி கட்டி அவரின் பிணத்தை தோண்டி எடுத்து வந்து அவரின் சாதி ஆராய்ச்சி செய்யப் புறப்பட்டுள்ளனர். கடப்பாரை எடத்துக்கொண்டு இடிக்கப் பறப்பட்டவனுக்கு கட்டுமானத்தின் அருமை புரியாது. பெருந்தலைவர், காமராசரும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் எதிரெதிர் முகாம்களில் நின்றுகொண்டு தம் தனித்த பண்பாடு,மொழி, நாகரீகம் காத்தனர். உலக த த்துவப்போராட்டங்கள் தவறான த்த்துவங்களை தந்தவனை அடையாளம் கண்டு பாசிசம்,நிறவெறி ,முதலாளித்தவம், சர்வாதிகாரம் ஆகியவற்றை அடையாளம் கண்டு ,எதிர் கொண்டு அழித்து நியாயங்களை நிலைநாட்டி வெற்றி கொண்டது உலக வரலாறு. ஆனால் எதிரியை உடன் வைத்துக்கொண்டு ,அடையாளம் தெரியாமல் போருக்கு நிற்கிறோம். எனவேதான் ஆணவம் கொலை எதிர்ப்பை மட்டுமே சாடுகிறதோடு நம் எல்லையை சுருக்கிக் கொண்டுவிட்டோம். கொலை செய்யாமல் சாதி வெறியுடன் கை ,கால் ஒடித்தோ, அடித்து அஅடக்கியது, பிரித்து வாழவிடாமல் செய்தோ சாதிக் கொடுமை புரிவோரை திருத்துவது மீண்டும் பெரியார்தான்.

 7. நான் ஆதிக்க சாதி
  என்று கூறுவதே ஆதிக்கத்தின் உச்சம்
  உஙுகள் உண்மையான நோக்கம் என்ன?
  ஆண்டாண்டு காலமாய் சாதிய கொடுமைகளுக்காக எத்தனையோ இயக்கங்கள் போராடி வருகின்றன.
  என்னமோ இவர்கள் சில பிரபலங்களை வைத்து ஆதிக்க சாதிக்கு ஆதரவாக விளம்பரம் செய்வது போல உள்ளது.
  உஙு்க இந்த ஐடியா இந்த நூற்றாண்டின் நகைச்சுவை..
  கடுமையான கண்டனங்கள்.

 8. இது என்ன ஆதிக்க சாதி விளம்பரமா??
  எப்படி இப்படி எல்லாம் ஐடியா வருகிறதோ.
  வன்மையாக கண்டிக்கத்தக்கது இது.

 9. ஜாதிக்கு எதிரான போர்க்குரலாக இது புலப்படவில்லை மாறாக பல பெண்ணியவாதிகளின் ஜாதியை வெளிப்படுத்தும் பதிவாகத்தான் இதை புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக தோழர் குட்டி ரேவதி அவர்களுக்கு பீர் முகமதுவிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ஜாதி வக்கிரக்கொலைக்கு எதிரான முன்னெடுப்பு என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு ஆதிக்க ஜாதி பட்டம் சுமத்தி இன்பம் காணும் மனநோயை என்னவென்று புரிந்து கொள்வது.

 10. I Strongly Condemn Mr. Peer Mohammed. He did not get my permission to use my Photograph. He didnt even explain about what is going to happen. All of a sudden I was shocked to see my photograph which is being misused by his own contents scribbled on my photograph. Why should I condemn other castes saying that I’m an Upper Caste. Where is your Photograph Mr. Peer Mohammed? Do you accept Honour Killing?

 11. இந்த பதிவில் முக்கியமாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், ஆணவக் கொலைகள் என சரியான சொல் பயன்பாட்டை பயன்படுத்தியிருப்பது சரி, ஆனால் நான் உயர் சாதி / ஆதிக்க சாதி எனக் குறிப்பிடுவது பிழை.
  நான் உயர் / ஆதிக்க சாதிய குடும்பத்தில் பிறந்தவர் / பிறந்தவள்.
  I happened to born in a upper caste / feudal caste family / community.
  இந்த வேறுபாடு இல்லை எனில், இது ஒரு supremacist பதிவு தான். சுயசாதி பற்று இருக்கிறதா என்கிற வேறுபாடு தான் அடிப்படை. – Excellent Brother Rahunaath

 12. நான் உயர்சாதிப் பெண். நான் ஆதிக்கசாதிப் பெண்…ஆணவக் கொலையைக் கணடிக்கின்றேன்… என்பதினுடே சாதிய வெறி இழையோடுவதை அவதானிக்க முடிகிறது…

  நான் ஆணவக் கொலையை கண்டிக்கின்றேன் என்ற ஹேஷ் டேக்கே போதுமானது…

  சகோதரி குட்டி ரேவதி கூட ” நான் உயர்சாதிப் பெண் இருப்பினும் இந்த ஆணவக் கொலையை கண்டிக்கிறேன் என்று கூறிஇருப்பாரா என்ற சந்தேகம் எழுகின்றது. அவர் விளக்கம் தரவும்.

 13. வன்கொடுமை தடுப்பு சட்டம், தீண்டாமை தடுப்பு சட்டம் என்று பல்வேறு சட்டங்களை வகுத்தாலும் எந்த சட்டங்களாலும் தலித் சமூக மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடிவதில்லை,

  தலித் சமூக மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து அடக்குமுறைகளிலிருந்து மீட்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே தீர்வு இஸ்லாம் மட்டுமே…

  இந்துக்களுக்காக வாதாட, இந்துக்களுக்காக போராட, இந்துக்களுக்கா பரிந்து பேச என்று படம் காட்டும் இந்துத்துவ இயக்கங்களால் தலித் சமூக மக்களை பாதுகாக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் தான் அரசியல் பதவிவெறிக்காக மக்களை கூறுபோட்டு வருகிறார்கள்.

  தலித் சமூக மக்களை கண்ணியமாக வாழ வைக்க வேண்டுமென்றால் அவர்களை தலை நிமிர செய்ய வேண்டுமென்றால் இஸ்லாம் மட்டுமே அவர்களுக்கு சரியான தீர்வு…

  இஸ்லாம் அவர்களை கண்ணியப்படுத்தும், இஸ்லாம் அவர்களை வாழ வைக்கும், இஸ்லாம் அவர்களை தலைநிமிர செய்யும்.

  சிந்திப்பவர்களுக்கு பலன் உண்டு…

 14. சாதி என்பதே ஒருவரை இழிவுபடுத்தி இன்னொருவரை பகட்டில் அமரவைப்பது.இதில் ஆதிக்கசாதி என்று பெருமைப்பட்டு விட்டு கருத்துச் சொல்லவோ,சமத்துவப்படுத்தவோ என்ன அருகதை இருக்கிறது.

 15. hey guys
  it is so happy to hear that u r condemn the honour killing.besides ur condemn any impact is going to happen? these things are so foolish .before saying u r a upper caste thing about that ….what make u upper caste… so dont use these wordssssssss….

 16. சமூக செயற்குபாட்டாளர் குட்டி ரேவதி அவர்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்ததா ” நான் ஆதிக்க சாதி” . அப்படி நான் ஆதிக்க சாதி என்று சொல்லித்தான ஆணவக் கொலைகளை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.
  எப்போது உணரப்போகின்றோம்?