’நான் இதற்கு விளம்பரம் சேர்க்க விரும்பவில்லை’

0
27

சட்டமன்றத்தைக் கூட்டினால் திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என அக்கட்சியின் செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையைக் கூட்ட தமிழக ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ”நாங்கள் நேற்று முன்தினம் கவர்னரிடம் சென்று தெளிவாக கூறிவிட்டு வந்திருக்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜனநாயக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னருக்கு இருக்கக்கூடிய பொறுப்பு, கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அப்படியில்லையென்றால், விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம், மக்கள் மன்றத்தை சந்திப்போம் என்று தெளிவாக சொல்லியிருந்தோம். அந்த அடிப்படையில், இன்று நீதிமன்றத்திற்கு சென்றாயிற்று, வழக்கும் தொடுத்தாயிற்று. அந்த வழக்கின் அடிப்படையில், ஜனநாயக அடிப்படையில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம்.” என்றார்.

மேலும் அவர், ”அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி பெரும்பான்மை இருக்கிறது என்றால், சட்டமன்றத்தை கூட்டக்கூடிய அதிகாரம் இப்போது யாருக்கு இருக்கிறது என்றால், கூட்டத்தொடரை ஏற்கனவே முடித்தாயிற்று, முடித்தப் பிறகு மீண்டும் கூட்டக்கூடிய அதிகாரம் கவர்னருக்குதான் இருக்கிறது. ஒருவேளை முதலமைச்சருக்கு தன் மீதான் நம்பிக்கையை நிரூபிக்கக்கூடிய தைரியம் இருந்தால், அவரே கவர்னரிடம் பரிந்துரை செய்தால் சட்டமன்றத்தை கூட்டுவார்கள். அப்படி கூட்டினார்கள் என்றால், நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்.” என்றார்.

தனக்கும் திமுகவிற்கும் மட்டுமே போட்டி என்று டிடிவி தினகரன் கூறியது குறித்துப் பேசிய அவர், ”அவருடைய விளம்பரத்திற்காக அவர் அப்படி சொல்லலாம். அதற்கு நான் விளம்பரம் சேர்க்க விரும்பவில்லை.” என்றார்.

இதையும் படியுங்கள்: “நீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களை தமிழக அரசு மிரட்டுகிறது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்