‘நான் அரசியலுக்கு வர வேண்டும்’ என நெல்சன் மண்டேலா கூறினார்: பிரியங்கா காந்தி

0
284

‘நான் அரசியலுக்கு வர வேண்டும்’  என்று மற்றவர்கள் கூறுவதற்கு முன்னால் தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்தநாளை நினைவுகூர்ந்து பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் 

உலகம் மண்டேலா போன்றவர்களை முன்னெப்போதையும்விட இன்று அதிகம் இழந்துவருகிறது. அவரது வாழ்க்கை உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்திற்கு ஒருசான்றாக இருந்தது.

 எனக்கு அவர் Uncle Nelson மற்றவர்கள் என்னை அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்வதற்கு முன்னால் நெல்சன் மண்டேலா நான் அரசியலில் இருக்க வேண்டும் என கூறினார். அவர் எனக்கு எப்போதும் தூண்டுதலாகவும், வழிகாட்டியாகவும் இருப்பார் என்று பதிவிட்டுள்ளார். 

பிரியங்கா காந்தி மண்டேலாவுடன் தான் இருக்கும் ஒளிப்படத்தை வெளியிட்டு 2001 இல் எனது மகனின் ஆடம்பரமான தொப்பியைப் பார்த்து இதயப்பூர்வமாக சிரிக்கிறார் என்று பதிவிட்டுள்ளார் . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here