நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் கோவை முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருநகரங்களில், கடந்த 2016ஆம் ஆணடில் பதிவான பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த புள்ளிவிபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவின் 19 பெருநகரங்களில் டெல்லியில்தான் அதிகளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13,803 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன என்றும், அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அதிக குற்றங்கள் நடந்துள்ளன. சுமார் 13.8 லட்சம் பெண்கள் வசிக்கும் லக்னோவில் 2,205 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன என்றும், அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உள்ளது. சுமார் 14.5 லட்சம் பெண்கள் வசிக்கும் ஜெய்பூரில் 2,090 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன என்றும், அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai

மேலும் நான்காவது இடத்தில் பாட்னா (பீகார்); ஐந்தாவது இடத்தில் நாக்பூர் (மகாராஷ்டிரா); ஆறாவது இடத்தில் இந்தூர் (மத்திய பிரதேசம்); ஏழாவது இடத்தில் காஸியாபாத் (உத்தரப் பிரதேசம்); எட்டாவது இடத்தில் புனே (மகாராஷ்டிரா); ஒன்பதாவது இடத்தில் பெங்களூரு (கர்நாடகா) மற்றும் 10வது இடத்தில் கான்பூர் (உத்தர பிரதேசம்) ஆகிய நகரங்கள் உள்ளன.

chennai-2

மொத்தம் 19 பெருநகரங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், கோவை 19வது இடத்தில் உள்ளது. சுமார் 10.7 லட்சம் பெண்கள் வசிக்கும் கோவையில் 102 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன என்றும், அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 18வது இடத்தில் சென்னை உள்ளது. சுமார் 43.1 லட்சம் பெண்கள் வசிக்கும் கோவையில் 544 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன என்றும், அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சிறுதொழில் தொடங்க வேண்டுமா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்