பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஒன்97 நிறுவனம்2017-18 ஆம் நிதியாண்டில்1,604.34 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. ஆனால்,2018-19 ஆம்  நிதியாண்டில் மும்மடங்கு கூடுதலாக 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்97-ன் துணை நிறுவனங்களான பேடிஎம் மணி,பேடிஎம் பைனான்ஸ் சர்வீஸ், பேடிஎம் எண்டர்டெயின்மெண்ட் சேவை ஆகியனவும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

பேடிஎம் நிறுவனம்கடந்த 2018 
ஆம்  நிதியாண்டில் 3,309.61 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு வருவாய் 8.2 சதவிகிதம் உயர்ந்து 3,579.67 கோடி ரூபாய் ஆனது. பேடிஎம் நிறுவனம், தனது பிராண்ட் பெயரை வளர்க்கவும் தொழிலை விரிவாக்கவும் செலவழித்துதான் அதிக நஷ்டத்தை அடைந்தற்கான காரணமாகக்  கூறப்படுகிறது.மேலும்,கடந்த 2018 நிதியாண்டை விட 2019 நிதியாண்டில் செலவும் 4,864.53 கோடி ரூபாயிலிருந்து 7,730.14 கோடி ரூபாய் ஆக அதிகரித்ததே  நஷ்டத்துக்குக் முக்கியக் காரணம் என பேடிஎம் நிறுவனமும் தனது வருடாந்திர பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பேடிஎம் நிறுவனத்துக்கு தற்போதைய சூழலில் 14 மில்லியன் ஸ்டோர்கள் நாடு முழுவதும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.