தென் கொரியாவில் நாடு முழுவதும் அதிவேக இணைய சேவையைப் பெற அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளாவிய, தரமான, அதிவேக இணைய சேவை அந்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வழங்கவிருப்பதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிவேக இணையம் என்பது ஒரு உலகளாவிய சேவையாக உள்ளது என்றும் இந்நாட்டில் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என்றும் இதற்கான உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தென் கொரிய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் உலகளாவிய அதிவேக இணையத்தை வழங்கும் நாடாக உலகில் எட்டாவது இடத்தை தென்கொரியா பெறுகிறது. இங்கு வினாடிக்கு 100 எம்.பி.பி.எஸ் என்ற வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. 

அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, மால்டா, குரோஷியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் உலகளாவிய அதிவேக இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. இருப்பினும் அமெரிக்காவில் வழங்கப்படும் சராசரி இணைய வேகம் 10 எம்.பி.பி.எஸ். ஒரு சில பகுதிகளில் 1 – 2 எம்.பி.பி.எஸ் என்ற அளவிலே சேவை வழங்கப்படுகிறது. 

தென் கொரியாவில் உள்ள சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம் பழைய கட்டிடங்களில் தேவையான அதிவேக இணைய உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. 

சமீபத்திய நடவடிக்கை இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் என்று தென் கொரியஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here