நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் – முதல்வர் பழனிசாமி

0
97

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக ( நவ-21) இன்று சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா வந்து சேர்ந்தார்.

பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் மத்திய அமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது;

 • அவிநாசி சாலை- உயர்மட்ட சாலை திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
 • தமிழகத்தின் முக்கிய நதி இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும்.
 • தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
 • நிர்வாக திறனில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
 • நாட்டிலேயே நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.
 • கொரோனா நோய் பரவலை தடுக்க பிரதமர் மோடி சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
 • நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்.
 • தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு.
 • மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்ததும் கடைமடை பகுதிகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது.
 • புதிய திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பருவ காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
 • காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து அனுமதிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here