நாடாளுமன்றத்தில் பாஜக நினைத்ததையெல்லாம் நடத்திவிடமுடியாது -ராகுல் காந்தி

0
368

பாஜக-வை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 52 எம்.பி.க்களே போதுமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். அவர்கள் பாஜக-வுக்கு எதிராக தினமும் போராடுவார்கள் என்று கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் எம்.பி-க்கள்  ஒன்று கூடினார்கள். கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருக்கலாம் ஆனால் அவர்கள் அனைவரும் தைரியமுள்ள சிங்கக் கூட்டம் . அவர்கள் அனைவரும் நமது அரசியலமைப்பு, நமது நிறுவனங்களை பாதுக்காக்க போராடும் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்  நாடாளுமன்றத்தில் பாஜக நினைத்ததையெல்லாம் நடத்திவிடமுடியாது என்று பதிவிட்டுள்ளார்.  

மற்றுமொரு டிவீட்டில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியாவுக்கு வாழ்த்துகள். உங்களது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் வலிமையுடனும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும் எதிர்கட்சியாக விளங்கும். நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடும் என்று பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here