நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழக அரசை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், ”ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்” என குறிப்ப்பிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

kamal

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல்ஹாசன் யாருடைய கைக்கூலியாக அல்லது கைப்பாவையாக செயல்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும், ஆதராமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, தமிழகத்தை விட்டு ஓடுவதாக் கூறியவர்தான் கமல்ஹாசன் என்றும், அவர் இன்றும் குணா கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து வருகிறார் என்றும் விமர்சித்தார். தாங்கள் அனைவரும் உப்பு போட்டே சாப்பிட்டு வருகிறோம் என்றும், தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது எனவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: டெங்குவா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ அவசர நிலையை ஏன் அறிவிக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்