இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 வது ஒரு நாள் போட்டி நாக் பூரில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

ஐதராபாத் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமபலமாக இருந்தது. பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, டோனி, கேதர் ஜாதவ், ரோகித்சர்மா ஆகியோரும், பந்து வீச்சில் முகமதுஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி இழந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் களமிறங்கும். ஆஸ்திரேலிய அணியில் அதற்கான மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் படுமோசமாக உள்ளது. அவர் கடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட எட்டவில்லை. தற்போது மெக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தை மட்டுமே ஆஸ்திரேலியா நம்பி உள்ளது. அவர் சிறப்பாக ஆடும்பட்சத்தில், இந்திய அணிக்கு சவால் கொடுக்க முடியும். இதுதவிர உஸ்மான் கவாஜா, ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் ஹோம், நாதன் கோல்ட்டர், கும்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்களும் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர். மூத்த வீரர் ஷான் மார்ஷ் இன்றைய போட்டியில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
போட்டி நடக்கும் நாக்பூர் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது.

இன்றைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சான்லில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அணிகள் விவரம் :

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், அம்பதி ராயுடு, டோனி, கேதர்ஜாதவ், விஜய்சங்கர், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமதுஷமி, ரிசப்பன்ட், லோகேஷ் ராகுல், பும்ரா, யசுவேந்திர சாஹல், சித்தார்த் கவூல்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் கோம், மேக்ஸ் வெல், கேரி, நாதன் கோல்ட்டர், கும்மின்ஸ், பெகரன்டார்ப், ஆடம் ஜம்பா, நாதன் லயன், ஷான் மார்ஷ், கானே ரிச்சர்ட்சன், ஆர்சிஷார்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here