நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத் துறை மினவ கிராமத்தில் படகுப் போட்டி நடைபெற்றது. அப்போது, படகுகளில் சென்ற 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுக்கடலுக்குச் சென்றபோது கடலுக்குள் குதித்து நீந்தியபோது, அலையில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அலையில் சிக்கிய சிலரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். இதில் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் சிலரை மீட்புக் குழுவினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்