தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலைகொண்டிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடகடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழைக்கும், தென்கடலோர பகுதிகளின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 85.4 மிமீ மழை பெய்துள்ளது. அதனைத்தொடர்ந்து கடலூரில் 60.7 மிமீ மழையும், பரங்கிப்பேட்டையில் 47.2 மிமீ மழையும், அதிராம்பட்டிணத்தில் 12.6 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: அதிரிந்தி… மியூட் செய்த பின்பும் தெறிக்கவிடும் ரசிகர்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்