மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்தத் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென்தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம், புதன்கிழமை (இன்று) தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

rain

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 46.8 மிமீ மழையும், அதனைத்தொடர்ந்து பரங்கிப் பேட்டை மற்றும் தஞ்சையில் தலா 20.0 மிமீ மழையும்; அதிராம்பட்டிணத்தில் 7.4 மிமீ மழையும், கடலூரில் 9.0 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்