1. நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.27)இல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி சனிக்கிழமை (மார்ச்.3) நடைபெற்றது.

2. இத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, நாகா மக்கள் முன்னணி (Naga Peoples Front), தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி (Nationalist Democratic Progressive Party) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன

3. மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. என்டிபிபி தலைவர் வேட்பாளர் நிபியூ ரியோ, போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 60 இடங்களில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டது. மீதமுள்ள 40 இடங்களில் அதன் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி. (Nationalist Democratic Progressive Party) கட்சி போட்டியிட்டது.

4. பாரதிய ஜனதா கட்சி 11 இடங்களிலும்; நாகா மக்கள் முன்னணி 27 இடங்களிலும், தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி 16 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. தேசிய மக்கள் கட்சி (National People’s Party) இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

5. கடந்த 2013ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எட்டு இடங்களிலும்; தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி ஒரு இடத்திலும், நாகா மக்கள் முன்னணி 38 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. இம்முறை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை. அதேபோன்று என்.டி.பி.பி கூடுதலாக 28 இடங்களைப் பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி ஒன்பது இடங்களை இழந்துள்ளது.

naga1

Source : ECI

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்