நாகாலாந்தில் பாஜக கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியை (Nationalist Democratic Progressive Party) ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் பிபி ஆச்சாரியா அழைப்பு விடுத்துள்ளார்.

மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்.27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் என்டிபிபி தலைவர் நிபியூ ரியோ, போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டது. மீதமுள்ள 39 இடங்களில் அதன் கூட்டணி கட்சியான என்டிபிபி கட்சி போட்டியிட்டது.

இதில் பாரதிய ஜனதா கட்சி 11 இடங்களிலும்; நாகா மக்கள் முன்னணி 27 இடங்களிலும், என்டிபிபி 16 இடங்களிலும் வெற்றிபெற்றது. தேசிய மக்கள் கட்சி (National People’s Party) இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் தங்களுக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அதற்கான கடிதத்தையும் என்டிபிபி தலைவர் நிபியூ ரியோ, அம்மாநில ஆளுநர் பிபி ஆச்சார்யாவைச் சந்தித்து கொடுத்தார். இதனையடுத்து என்டிபிபி கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் பாஜக கூட்டணி நாகாலாந்தில் ஆட்சியமைக்கவுள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்