நாகாலாந்து மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது.

மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து மாநில சட்டப்பேரவைக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.27), வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சனிக்கிழமை (இன்று) காலை எட்டு மணி முதல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 60 இடங்களில் 20 இடங்களில் போட்டியிட்டுள்ளது. மீதமுள்ள 40 இடங்களில் அதன் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி. என்னும் தேசிய ஜனநாயக முன்னணி (Nationalist Democratic Progressive Party) கட்சி போட்டியிட்டுள்ளது.

மதியம் 12.10 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 32 இடங்களிலும், என்.பி.எஃப் கட்சி (Naga People’s Front ) 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here