நவ.7ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

0
242

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.முதலீடு செய்த நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து, துபாய் மற்றும் அமெரிக்காவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளைக் கொண்டு வர ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்நிலையில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அனுமதி போன்றவற்றுக்கு அமைச்சரவையின் ஒப்புதலைப்பெற வேண்டிய நிலை உள்ளதால் வரும் 7ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் நடைபெற உள்ளது.

கட்டுமானத்துறையினர் பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்க கோரிவருகின்றனர். இந்த கோரிக்கை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here