நவம்பர் 25ம் தேதி முதல் தமிழகம் – ஆந்திரா இடையே பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு இடையேயான அத்தியாவசிய சேவைகள் தவிர பிற போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ரயில், சரக்கு வாகனங்கள், விமானங்கள் தவிர சாலை மார்க்கமான பேருந்து சேவைக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்திற்குள் மாவட்டங்கள் இடையே குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இந்த நிலையில் இபாஸ் இல்லாமல் அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கும், நவம்பர் 16 முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்ககும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆந்திர மாநில முதல்வரின் வேண்டுகோளின் படி நவம்பர் 25ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு தனியார் மற்றும் பொது பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இர மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இபாஸ் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here