தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என என வலியுறுத்தி, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுவதாகவும், தமிழகத்தில் இந்தப் பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

highcourt

இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதி அளித்தும் பள்ளி தொடங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது பற்றி முடிவெடுக்க தமிழக அரசுக்கு எட்டு வார கால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே பள்ளிகள் துவங்கப்படாததற்கு காரணம் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், ”மத்திய அரசைப் பொறுத்தவரையில், மதவாதத்தை அடிப்படையாக வைத்து, அந்தக் கொள்கைகள், லட்சியங்களின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். அதனை நாங்கள் கண்டித்து, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.” அதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நவதோயா பள்ளிகள் மூலம் இந்தித் திணிப்பில் மத்திய அரசு ஈடுபட வாய்ப்புள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்