நவீனாவின் படுகொலை விட்டுச்சென்றுள்ள கேள்விகள்

0
380

(ஆகஸ்ட் 3, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

விழுப்புரத்தில் செந்தில் என்ற 30 வயது தலித் இளைஞரால் ஒரு தலையாகக் காதலிக்கப்பட்டு அவரால் தீக்கிரையாக்கப்பட்டு ஜிப்மரில் உயிரிழந்தார் 17 வயது சாதி இந்துப் பெண் நவீனா; நவீனாவும் செந்திலைப்போல ஏழை; செந்தில் தலித் என்பதால் அல்ல, பெண் 12ஆம் வகுப்பு படிக்கிறாள் என்பதற்காகவும் அவளுடைய விருப்பம் வேறாக இருந்ததாலுமே செந்திலை நவீனாவின் குடும்பம் ஏற்கவில்லை; ஆனால் செந்தில் குடித்துவிட்டு ரயில் விபத்தில் சிக்கியதை நவீனாவின் குடும்பத்தினரது தாக்குதலாக ஊடகங்களில் சித்தரித்திருக்கிறார். இதற்கு தெரியாமல் துணைபோய்விட்டதாக ஊடகவியலாளர் குணசேகரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

NaveenaGuna

இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சாதிவெறியை நம்பி அரசியல் செய்யும் குழுக்கள் நவீனாவின் மரணத்தில் ஆதாயம் தேட நினைக்கின்றன; தலித் பெண் கலைச்செல்வி சாலியமங்கலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலைக்குள்ளாகியிருப்பதை இந்தச் சாதி அரசியல்வாதிகள் மவுனமாகக் கடந்துபோகிறார்கள். நவீனாவின் பேரிழப்பால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்துக்கு சாதி ஆதிக்கவாதிகளின் வெற்றுக் கூக்குரல்கள் மாயையான ஆறுதலைத் தரக்கூடும்.

NaveenaMarx

இரண்டு முக்கியமான பிரச்சனைகளை நவீனாவின் மரணம் முன்னிறுத்துகிறது; ஊடகங்கள் ஊடகவியலின் அடிப்படையான உண்மைச் சோதனையை எப்போதும் உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும்; ஏழை, எளிய பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தவறிழைக்கும் ஆண்களின் வன்மம் அகற்றப்பட வேண்டும். இரண்டுமே சவாலான வேலைகள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்