சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஷரீஃப் ஆகியோர் லாகூர் விமான நிலையத்தில் ஜூன் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் அந்நாட்டிலுள்ள அதியாலா சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

25 ஆம் தேதி பாகிஸ்தான் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நோயுற்றிருக்கும் நவாஸ் ஷரீஃபின் மனைவி குல்சூம் நவாஸைக் காண இருவரும் லண்டனில் இருந்தனர். ஜூலை 6, 2018ல் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக நவாஸ் ஷரீஃப் மற்றும் அவரது மகள் அறிவிக்கப்பட்டனர்.

நவாஸுக்கு 10 ஆண்டுகள் மற்றும் மரியத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஷரீஃபின் மருமகனான முகமது சஃப்தார் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அரசியல் பதவி வகிப்பதற்கும், தேர்தலில் பங்கேற்கபதற்கும் நவாஸ் ஷரீஃபுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
“பாகிஸ்தானின் வருங்கால தலைமுறைகளுக்காக நான் என்னையே தியாகம் செய்கிறேன்,” என்றார் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப்.

சமீத்திய சம்பவங்கள் தேர்தலின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது என்றார். ஜனநாயக நடைமுறைகளை மதிப்பதால் தான் திரும்பி வந்ததாக அவர் கூறினார்.

அதே வேளையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சியினர் லாகூர் விமான நிலையத்திற்கு பேரணியாக செல்ல முற்பட்டதையடுத்து காவல்துறையினால் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்