முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதிகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161இன் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரமிருப்பதால், தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்