நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா

0
320

நலன் குமாரசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அதனைத் தொடர்ந்து இயக்கவுள்ள படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதற்காகக் கதைகள் எழுதி வந்தார் நலன் குமாரசாமி.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷாவுடன், கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படம் மார்ச் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’, விஷாலுடன் ‘எனிமி’ ஆகிய படங்கள் ஆர்யா நடிப்பில் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் அடுத்ததாக பிரபல இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்றவர் நலன் குமாரசாமி. பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூதுகவ்வும்’ படத்தை இயக்கி முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பின்னர் 4 வருட இடைவேளைக்குப் பின் மீண்டும் விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தை இயக்கிய நலன் குமாரசாமி, அதற்கு பின்னர் சமீபத்தில் வெளியான ‘குட்டி ஸ்டோரி’ என்ற ஆந்தாலஜியில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் நடித்த கதையை இயக்கினார். அந்தக் கதைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான நலன் குமாரசாமி கடந்த 8 ஆண்டுகளில் 2 திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இரண்டு ஆந்தாலஜி படங்களில் இரு கதைகளை இயக்கியிருக்கும் இவர் சூப்பர் டீலக்ஸ், மாயவன் உள்ளிட்ட படங்களின் ஸ்கிரிப்ட்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக ஆர்யாவும் – நலன் குமாரசாமியும் இணைந்து பணியாற்ற இருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here