நலன் குமாரசாமியின் படத்தில் புருவ அழகி ப்ரியா வாரியர்?

0
293

மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்த முதல் படம் – ஒரு ஆதார் லவ் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் இந்தி முதல் தமிழ்வரை பல வாய்ப்புகள். எல்லாம், பாடல்காட்சியில் புருவத்தில் அவர் வெளிப்படுத்திய காதல் மொழிகள்.

ப்ரியாவை தமிழில் நடிக்க வைக்க எண்பது சதவீத தயாரிப்பாளர்கள் விரும்பியிருப்பார்கள். அதேபோல் இயக்குனர்களும். நேற்றிலிருந்து ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் அலைகிறது. நலன் குமாரசாமியின் புதிய படத்தில் ப்ரியா நடிக்கிறார்.

காதலும் கடந்து போகும் படத்துக்குப் பிறகு சொந்த கதையையே படமாக்குவேன் என்ற பிடிவாதத்துடன் நலன் ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் இன்னும் ஸ்கிரிப்டை முடிக்கவில்லை. அதற்குள் ப்ரியாவை ஒப்பந்தம் செய்தாரா?

நெருங்கி விசாரித்ததில் நலன் படத்தில் ப்ரியா என்பது கம்பளத்தில் வடிகட்டிய பொய் என்பது தெரிந்தது. யாராவது நலன் படத்தில் புருவ அழகி நடிக்கிறார் என்றால் நம்பாதீர்கள்.

இதையும் படியுங்கள்: ’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்