நயன்தாரா நடித்திருக்கும் கொலையுதிர்காலம் படத்தை, இன் கம்ப்ளீட் – முடிக்கப்படாத படம் என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் விமர்சித்திருந்தார். இதற்கு படத்தின் தயாரிப்பாளர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், கொலையுதிர் காலம் படத்தை முடித்து தணிக்கைச் சான்றிதழும் பெற்றுள்ளனர்.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் யுவன் இசையில் நயன்தாரா நடிப்பில் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம் கொலையுதிர் காலம். யுவன் படத்தை தயாரிப்பதாக இருந்து கடைசி நேரத்தில் அவர் விலக, வேறெnருவரை வைத்து படத்தை முடித்தனர். இதில் வாய் பேச முடியாத, காது கேட்காத வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ராதாரவி நிகழ்ச்சிக்கு வராத நயன்தாராவை விமர்சித்ததோடு ஆபாசமாகவும் அவரைக் குறித்து பேசினார். நயன்தாராவின் காதலர் என்றமுறையில் கொதித்துப் போன விக்னேஷ் சிவன் ராதாரவிக்கு எதிராக ட்விட்டரில் கடும் விமர்சனங்களை வைத்தார். அதில், முடிக்கப்படாத படம் என்று ஒருவரி சேர்த்திருந்தார். இதன் காரணமாக படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்தார்.

இந்த களேபரங்கள் அடங்கி படம் தணிக்கைக்குழுவுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். கொலையுதிர் காலம் மே யில் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தணிக்கைச்சான்றிதழும் கிடைத்துள்ளதால், படம் மே யில் திட்டமிட்டபடி வர அதிக வாய்ப்புள்ளது.

அப்படியானால் முடிக்கப்படாத படம் என்று விக்னேஷ் சிவன் கூறியது? வேறென்ன… பொய்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here