நயன்தாராவுடன் வரும் 6 பேர் : செலவு ரூ.70 ஆயிரம் : கொதிக்கும் தயாரிப்பாளர்

As per media reports, Producer K Rajan has claimed that due to Nayanthara, the overall budget of a film goes haywire. He spoke about how Nayanthara is always accompanied by 6-7 assistants whose daily salary is 7-8k.

0
759

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் டைரக்டர்கள் பாக்யராஜ், மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே.ராஜன், “கோடி கோடியாக சம்பளம் பெறும் நடிகைகளின் உதவியாளர்களுக்கு படி கொடுப்பதால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு ஆகிறது. வருமானத்தில் 10 சதவீதம் வரி கட்ட வேண்டும். மாநில அரசின் 8 சதவீத வரியை நீக்கும்படி கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

மேலும் கே.ராஜன் கூறும்போது, “கேரவன் செலவை நடிகர்-நடிகைகளே ஏற்க வேண்டும். நயன்தாராவுடன் சிகை அலங்காரம் செய்பவர், ஒப்பனை கலைஞர், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்பட 6 பேர் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தயாரிப்பாளர் ‘பேட்டா’ கொடுக்க வேண்டி உள்ளது. இதன்மூலம் தினமும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகிறது.

நடிகைகள் தமன்னா, சமந்தா உள்ளிட்டோரின் உதவியாளர்களுக்கும் இதே மாதிரி படி கொடுக்க வேண்டி உள்ளது. இந்த செலவுகளை நடிகைகளே ஏற்க வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here