கேரளாவை நிலைகுலைய செய்திருக்கும் வெள்ளப்பேரழிவுக்கு பலரும் உதவிவரும் நிலையில், நடிகை நயன்தாராவும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கேரளாவின் காசர்கோடு தவிர்த்து அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் பெரும் அழிவை சந்தித்துள்ளன. பலி எண்ணிக்கை 300 ஐ கடந்த நிலையில், வீடுகளை இழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய அரசு இதுவரை 500 கோடி ரூபாயே கேரளாவுக்கு ஒதுக்கியுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுக்கு ஐயாயிரம் இழப்பீடு வழங்கவே இயலாது.

நடிகர்கள் கமல், கார்த்தி, சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சித்தார்த் நடிகைகள் ஸ்ரீப்ரியா, ரோகிணி என பலர் நிதியுதவி வழங்கியுள்ளனர். நயன்தாரா தன் பங்குக்கு பத்து லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார். அரசுசாரா நிறுவனங்கள், தனிநபர்களின் உதவியே கேரளாவுக்கு அதிகம் பயன்படப் போகிறது. கேரளாவுக்கு இப்போது அனைவரது உதவியும் மிகத்தேவை.

#KeralaFloods, #KeralaRains, #Nayantara, #Suriya, #VijaySethupathi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here