சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துவரும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நீ எங்கே என் அன்பே படத்தில் தொடங்கிய நயன்தாராவின் நாயகி மையப் படங்களின் பயணம் மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா என தொடர்கிறது. அடுத்து அவரது நடிப்பில் வெளியாகும் நாயகி மையப் படத்தை மா, லட்சுமி குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கி வருகிறார். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குநரும் இவரே.

கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிப்பில் இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று வெளியிட்டுள்ளனர். படத்துக்கு ஐரா என்று பெயர் வைத்துள்ளனர். பர்ஸ்ட் லுக்கில் நயன்தாராவின் இரு படங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் டைட்டில் லோகோவிலும் இரு பெண் முகங்கள் உள்ளன.

ஆம், இது நயன்தாராவின் முதல் இருவேடப் படம். கிறிஸ்மஸ் தினத்தில் படம் திரைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்