ஊழல் புகார் குறித்த விசாரணையை எதிர்கொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தயாரா என அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள் : “சுந்தர் சி. விற்பனை செய்யும் தயாரிப்பு குஷ்பு” என்று சொன்ன மோடி பக்தருக்கு குஷ்பு செருப்படி

அதிமுகவின் இரு அணிகளிடையே விரைவில் பேச்சுவார்த்தைத் தொடங்கும் என மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருந்தார். ஆனால் அமைச்சர் சிவி சண்முகம், ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக தனது கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள் : பூணூல் போட்ட பெரியார் ராமானுஜர்: மை.பா.நாராயணன்

shanmugam

இது குறித்து பேசிய அமைச்சர் சண்முகம், தமிழகத்திற்கு சேகர் ரெட்டியை அறிமுகம் செய்து வைத்தவரே ஓபிஎஸ்தான் என்றார். மேலும் அவர், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, சேகர் ரெட்டியை அவசர அவசரமாக திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக ஓபிஎஸ் ஆக்கினார். ஓபிஎஸ் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சேகர் ரெட்டிக்கு அதிகளவு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன. இதற்கெல்லாம் ஓபிஎஸ் பதில் சொல்லத் தயாரா? நம்பியார், அசோகன்போல அருகருகே நின்று போஸ் கொடுத்த போட்டோவுக்கு என்ன அர்த்தம்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்