நடிகை காரில் கடத்தி பாலியல் தொந்தரவுக்கு உள்ளான வழக்கில் நடிகர் திலீப் பிரதியான பிறகு மலையாள சினிமாவில் பெரிய விரிசல் விழுந்தது. திலீப் கைது செய்யப்பட்ட நேரத்தில் ரம்யா நம்பீஸன், பார்வதி, ரிமா கல்லிங்கல் போன்ற சில நடிகைகள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் கண்டனத்தால் திலீபை நடிகர் சங்கத்திலிருந்து விலக்கினாலும், இப்போது திலீப் பழைய திலீபாக செல்வாக்குடன் வளைய வருகிறார். தொடர்ச்சியாக அவரது படங்கள் வெளியாகின்றன. ஆனால், அவரை எதிர்த்த நடிகைகளுக்கு படங்களில்லை. திட்டமிட்டு ஒதுக்குகிறார்கள். திலீபுடன் நடிக்கும் நடிகைகளை முணுமுணுப்புடனே அதிருப்தி நடிகைகள் பார்க்கிறார்கள். இப்படியொரு சூழலில் சீனியர் நடிகை நதியா திலீப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கே.பி.வியாசன் இயக்கத்தில் திலீப், அனு சித்தாரா நடிக்கும் படத்தில் முக்கிய வேடமேற்கிறார் நதியா. இது அதிருப்தி நடிகைகளை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. திலீபுக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நதியா போன்ற சீனியர் நடிகை அவரது படத்தில் நடிக்கலாமா என்று பேசி வருகின்றனர்.

அனு சித்தாரா, மம்தா மோகன்தாஸ் போன்ற பல நடிகைகள் பகிரங்கமாக திலீப் தரப்பை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here