விவசாயிகள் தங்களின் போராட்டத்தினை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய நதிகள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதேகோரிக்கையை வலியுறுத்தி சென்னையிலும் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கப் பிரதிநிதிகள், நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ”நடிகர் ரஜினிகாந்த் தான் அறிவித்தபடியே, நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகத் தெரிவித்தார். அதனை பிரதமரிடம் வழங்கக் கூறினோம். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்க வேண்டும் என ரஜினி கூறினார்.” என்றார்.

இதையும் படியுங்கள் : ஓ அஞ்சலி… ஓ ஜெய்… உருகிய காதல் நெஞ்சங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்